Tuesday, July 28, 2009

சக்திவேலுக்கு 10 கேள்விகள்

பதிவுலகை புரட்டிப்போட்டு தமிழ்மணத்தை கேள்வி மேல் கேட்ட புரட்சிப் புயல், விடை பெறுகிறேன் என்ற சமீபத்திய பதிவுலக தொற்று நோய்க்கும் ஆளானவர் நம்ம சக்திவேல்.

அவருக்கு பிரபல பதிவரின் 10 கேள்விகள்

1) நீங்கள் பதிவு எழுதுவதே அடுத்தவர்கள் பின்னூட்டம் இட வேண்டும் என்பதற்காக தானா?

2) உங்கள் பதிவை படிப்பவர்கள் உங்களுக்கு கட்டாயம் ஓட்டளித்தே ஆக வேண்டுமா?

3) தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் முதல் இடம் பெற்றுவிடத் தான் எழுதுகின்றீர்களா?

4) நீங்கள் விரும்பும் தமிழ்மண கிரீடம் உங்கள் பதிவுக்கு வந்தால் அதனால் விளையும் பலன்கள் என்ன?

5) மிகப் பெரும் சீர்திருத்தவாதியாக பதிவிட்ட உங்களுக்கு இன்றைய உங்கள் பதிவு திருப்தியளிக்கிறதா?

6) உங்களது இன்றையப் பதிவுக்கும் பின்னூட்டமளிக்காதவர்களை, ஓட்டளிக்காதவர்களை திட்டிப் பதிவிடுவீர்களா?

7) உங்கள் சினிமாத் துறை குறித்த பதிவுகள் மிக நல்லாருக்கு. அப்துல் கலாம் அவர்களுக்கு நேர்ந்த அவமானம் குறித்த உங்கள் பதிவின் கருத்துக்கள் மிக நன்றாக இருந்தாலும் அந்தப் பல்சர்ல பிரதமரும் , காங்கிரஸ் தலைவரும் இருக்க படம் தேவையா?

8) கருத்துக்களை படிக்கும் முன்னர் படத்தை பார்த்துவிட்டு உங்கள் மேல் கோபப்பட்டு படிக்காமல் பலர் சென்றிருப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

9) பின்னூட்ட அணாணிகள தண்டிக்க பல வழி சொன்னீங்க, அதே மாதிரி எழுத வந்ததே திரட்டிகளுக்காவும், ஓட்டுக்கும், பின்னூட்டத்துக்கும் தான் அப்டின்னு கூவுற உங்களுக்கு என்னா தண்டணை குடுக்கலாம்?

10) யாரோ திட்றாங்கன்னு போறேன்னு சொல்றவங்க, அப்றம் அமெரிக்காலருந்து ஹிலாரி கூப்புட்டாங்க, ஆப்கானிஸ்தான்ல இருந்து முல்லா ஒமர் கூப்புட்டாரு, இலங்கையிலருந்து கோத்தபயா கூப்புட்டாருன்னு சொல்லிட்டு திரும்ப வர்றவங்கள என்ன செய்யலாம்?

Saturday, July 18, 2009

அன்புள்ள ஆப்பு & ஆப்பரசன்...

அன்புள்ள ஆப்பு & ஆப்பரசன்,

உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா? பதிவு எழுதுனா கட்டாயம் பின்னூட்டம் போட்டே ஆகனுமா? பின்னூட்டத்துக்காக தான் பதிவு எழுதவே வர்றீங்களா? நீங்க எல்லாப் பதிவருக்கும் போயி பின்னூட்டம் போடுறியளோ? எத்தனப் பதிவுகளுக்கு நீங்க பின்னூட்டம் போட்டுருக்கியள்னு ஆதாரத்தோட சொல்லுங்க, அப்பறம் அடுத்தவனப் பத்தி பேசுங்க.

இதுல மிஸ்டர்.ஆப்பு,ஆப்பரசன் ஆபசமா எழுதுரார்னு வேற குறைப்பட்டுக்கிறாரு. இவரு ரொம்ப நல்லா எழுதிட்டமாதிரி. அசிங்கமான வார்த்தைகள உபயோகிக்கிறது மட்டும் ஆபாசமில்லை மிஸ்டர்.ஆப்பு. அடுத்தவங்களப் பத்தி தேவையேயில்லாத விசயங்கள நீங்க எழுதுறது ஆபாசம் தான். இதுவும் அசிங்கம் தான்.

நீங்க எழுத வந்தா எழுதிட்டுப் போங்க. பதிவு என்பது நீ உன் விருப்பத்துக்கு எழுதுவது. உன் விருப்பத்துக்கு எழுதலாம்னா அதுக்காக அடுத்தவங்களப்பத்தி என்னவேணும்னாலும் எழுதலாம்னு அர்தமில்ல. காதல் கோட்டையில புகழ் பெற்ற வசனம் ஒன்ன அகத்தியன் எழுதியிருப்பாரு. ”உரிமை அப்டிங்கிறது அடுத்தவன் மூக்கு வரைக்கும் தான். மூக்க தொடக்கூடாது”. நீங்க எழுத வந்தத எழுதிட்டுப் போங்க. அதப் படிக்கிறவங்க புடிச்சுருந்தா கட்டாயம் கருத்து சொல்லுவாங்க. அதே மாதிரி உங்களுக்குப் புடிச்ச பதிவ போயி படிங்க. புடிச்சுருந்தா ஓட்டுப் போடுங்க. பின்னூட்டம் போடுங்க. இல்லன்னா போயிக்கிட்டே இருங்க.

ஓட்டுப் போடனும், பின்னூட்டம் போடனும்னு கட்டாயப் படுத்த நீங்க யாருப்பா? நீங்க ஆப்பு அடிக்கிறேன், முதுகு சொறியிறவன காலி பண்ணப் போறேன்னு சொல்லிக்கிட்டு கிளம்புறது எந்த விதத்துல நியாயம் சாமீ? யாரு உங்களுக்கு அந்த அதிகாரம் குடுத்தது? உன் வேலைய சிறப்பா நீ பாரு. அடுத்தவனுக்கு புத்தி சொல்லவோ, ஆப்படிக்கவோ நீ யாரு ராசா? உனக்கு ஆப்பு எவனுமே அடிக்க மாட்டான்னு தைரியமா?

வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு. இப்டி கேவலமா அடுத்தவங்களப் பத்தி எழுதுறத விட்டுட்டு உங்களுக்கு தெரிஞ்ச நல்ல விடயங்கள நல்ல முறையில எழுதுங்க. எழுதுறப்ப பின்னூட்டங்கள் வரணும், ஓட்டு விழணும்னு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எழுதுங்க. Expectations Reduces the Joy - இது ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஜி சொல்லிக்கொடுக்கும் வாழும் கலையின் முதல் கான்செப்ட். இத கடைபிடிங்கப்பா. இன்னும் நல்ல விவரம் தெரியணும்ணா நீங்க எந்த ஊர்ல இருக்கியளோ அங்கன ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஜி யோட வாழும் கலை தரும் பயிற்சியில சேர்ந்து எல்லாத்தையும் கத்துக்கங்க. நீ யார் அப்டின்னு ஒரு கேள்வி வரும் இந்தப் பயிற்சியில. அப்ப தெரியும் சாமி நீ என்ற நீ ஒன்னுமே இல்லாத ஒன்னுன்னு. அதுக்கப்புறம் சுதர்சன கிரியான்னு ஒரு பயிற்சி இருக்கு. இதெல்லாம் கத்துக்கிட்டு வாழ்க்கையில முன்னேறப் பாருங்க ராசா.

வலையுலகம், இணையம் எல்லாம் ஒரு அற்புதமான விடயங்கள். நீ நல்லதை கொடுத்தால் நல்லதைப் பெறுவாய், நீ அவலத்தை தெளித்தால் அவலத்தை தான் அடைவாய்.

ஓம் சாந்தி சாந்தி .

Friday, July 10, 2009

பிரபலப்பதிவருக்கு வந்த வாசகர் கடிதம்

டிஸ்கி : இந்தக் கடிதம் எனக்கு வந்து ரொம்ப நாளாச்சு. பிரபலமானதுல இருந்து வந்த ஒரு சோம்பேறித்தனம் + ஆளாளுக்கு பிரபலப் பதிவர்கள்னு நம்ம பேரச் சொல்லிக்கிட்டு நிறையா பேரு இதே மாதிரி எனக்கு வந்த கடிதம் மாதிரியே கடிதப் பதிவெல்லாம் போட்டதால எழுதாம இருந்தேன் , ஆனா இனிமேலும் எழுதாம இருந்தா நல்லதில்லைன்னு தான் இத இப்ப வெளியிடுறேன்.

தயவு செய்து ப்ளாக்ல எழுதுங்க!.

அன்புள்ள பிரபலப் பதிவர் அவர்களுக்கு,
இதுவரை உங்கள் பதிவுகளை நான் படித்ததில்லை. நான் மட்டுமல்ல யாருமே படித்ததில்லை. இதற்கு காரணம் நீங்கள் இதுவரை பதிவுகள் எதுவும் எழுதவேயில்லை என்பதே.

இவர்தான் பிரபலப் பதிவர் அவர்தான் பிரபலப்பதிவர் என பலரும் பலருக்கும் உங்கள் பெயரை சூட்டிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நீங்கள் எழுதாமல் இருப்பது என்னை வியப்பிலும் வேதனையிலும் ஆழ்த்துகிறது.

நீங்கள் ஒதுங்கியிருப்பதால் தானே இப்படி எல்லோரும் உங்கள் பெயரை பயன்படுத்துகிறார்கள்? நீங்களே எழுதினால் இந்த நிலை ஏற்படாது அல்லவா ? எனவே தான் உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது.

நீங்கள் எழுத வேண்டியது காலத்தின் கட்டாயம். வலைப்பதிவுலகம் தற்போதிருக்கும் அவல நிலையில் உங்கள் பதிவுகள் தான் பதிவுலகை மீட்க இயலும். இனியும் தூங்கிக்கொண்டிருக்காமல் சிங்கமே சீறி எழுந்து வா.

உடனே வாங்க வந்து எழுதுங்க. காத்திருக்கோம்

இப்படிக்கு,
அரசியலற்ற பதிவுலகைக் காண காத்திருக்கும்
உன் அன்பு ரசிகன்.
ஓஸ்லோ, நார்வே.


என்னையும் மதிச்சு இப்டி ஒரு கடுதாசி வந்துருச்சு, இனியும் நான் தூங்கிக்கிட்டேயிருந்தா அது என் ரசிகனுக்கு நான் செய்யிற துரோகம் என்பது என் மரமண்டையில் உறைத்துவிட்டதால் உடனே புறப்படுகிறேன். இனி என் பதிவுகள் பதிவுலகை கலங்கடிக்கும் என என் இரசிகர்களுக்கு அறிவித்துக்கொள்கிறேன்.

பின்குறிப்பு:

இந்த பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் அனைத்துக்கும் பின்னூட்டமிடுபவர்களே பொறுப்பு.
பெயர் உள்ளவங்க, இல்லாதவங்க, அணாணி,தம்பாணி எல்லாரும் பின்னூட்டமிடலாம். பின்னூட்டங்கள் யாரையும் தாக்காமலிருக்கட்டும்.

நான் பிரபலப் பதிவர் என்பதால் எனக்கு பலவேலைகள் இருக்கும், பின்னூட்டங்களில் வரும் தேவையற்ற கருத்துக்களை உடனே நீக்க எல்லாம் என்னால முடியாது. முடிஞ்சப்ப எல்லாத்தையும் படிச்சுட்டு நீக்கிருவேன்.

கமெண்ட் மாடரேசன் எல்லாம் வைச்சுக்கிட்டு ஒன்னு ஒன்னா ரிலீஸ் செஞ்சுகிட்டு இருக்க எனக்கு நேரம் இல்ல. அதுனால கமெண்ட் ஓபன் டு ஆல்.

பொறுப்பா அடிச்சு ஆடுங்க மக்கா.

டப்பாசு...

ரெண்டு நாளைக்கு முன்னாடி மதுரை மாவட்டத்துல ஒரு ஊர்ல ஒரு பட்டாசு தொழிற்சாலை(??)யில வெடி விபத்து ஏற்பட்டு அந்த ஊர்ல வூட்டுக்கு ஒரு ஆளு இறந்துருக்காங்க.

முதல்வர் அய்யா சட்டசபையில காங்கிரஸ் எம் எல் ஏ ஞானசேகரன் கேட்ட கேள்விக்கு ஒரு பதில் சொல்லியிருக்காருங்க. 1963ல உரிமம் வாங்கி தொடங்குனதாம் அந்த தொழிற்சாலை. அந்த உரிமம் 2011 வரைக்கும் செல்லுமாம். அப்ப 1963ல உரிமம் வாங்கிட்டு அதுக்கப்பால ஒரு பாதுகாப்பு விதிகளையும் கண்டுக்காம அவன் தொழில் நடத்திக்கிட்டு இருந்தா நம்ம அரசாங்கத்தால ஒன்னுமே செய்ய முடியாதா? அந்த தொழிற்சாலைய பாதுகாப்பு விதிகள் ஒழுங்கா கடைபிடிக்கப்பட்டிருக்கான்னு எல்லாம் யாரும் சோதனை செய்ய மாட்டாங்களா? டப்பாசு தொழிற்சாலைக்கு கரண்டு கனெக்சன் குடுக்க கூடாதாம்ல? அப்ப எப்டி இந்த கெம்பனிக்கு மட்டும் குடுத்தாய்ங்க?

இப்ப செத்தவங்களுக்கு 1 லட்சம்னு நம்ம காச குடுக்குறாங்களே, இந்த விதி மீறல்களையெல்லாம் கண்டுக்காம விட்ட எல்லா அதிகாரிங்களையும் புடிச்சு விசாரிச்சு அவங்ககிட்ட இந்த காசையெல்லாம் வசூலிக்கலாம்ல?

என்னத்த சொல்ல ?

என்ன மக்கா சவுக்கியா இருக்கியளா?
மைக்கேல் ஜாக்சன் செத்துப் போனதுல இருந்து மனசே சரியில்ல.
சீக்கிரமா மனச தேத்திக்கிட்டு வந்து எழுதுறேன்.

வணக்கம்

வணக்கம் மக்களே,
நான் தான் பிரபலப் பதிவர்.
ஆனா நிறையா பேரு பதிவுலகத்துல நான் தான் பிரபலப் பதிவர் நீ தான் பிரபலப் பதிவர்னு போட்டிப் போட்டுக்கிட்டு இருக்காய்ங்க.

என்னடா இது நம்ம பேர சொல்லிக்கிட்டு ஆளாளுக்கு அடிச்சுக்கிறாய்ங்களேன்னு பார்த்துட்டுத்தான் நானே நேரடியா வந்துட்டேன்.

அய்யா எல்லாரும் நம்புங்க, நான் தான் உண்மையானப் பிரபலப் பதிவர்.

சீக்கிரம் பல விசயங்கள எழுதுறேன்.