Tuesday, July 28, 2009

சக்திவேலுக்கு 10 கேள்விகள்

பதிவுலகை புரட்டிப்போட்டு தமிழ்மணத்தை கேள்வி மேல் கேட்ட புரட்சிப் புயல், விடை பெறுகிறேன் என்ற சமீபத்திய பதிவுலக தொற்று நோய்க்கும் ஆளானவர் நம்ம சக்திவேல்.

அவருக்கு பிரபல பதிவரின் 10 கேள்விகள்

1) நீங்கள் பதிவு எழுதுவதே அடுத்தவர்கள் பின்னூட்டம் இட வேண்டும் என்பதற்காக தானா?

2) உங்கள் பதிவை படிப்பவர்கள் உங்களுக்கு கட்டாயம் ஓட்டளித்தே ஆக வேண்டுமா?

3) தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் முதல் இடம் பெற்றுவிடத் தான் எழுதுகின்றீர்களா?

4) நீங்கள் விரும்பும் தமிழ்மண கிரீடம் உங்கள் பதிவுக்கு வந்தால் அதனால் விளையும் பலன்கள் என்ன?

5) மிகப் பெரும் சீர்திருத்தவாதியாக பதிவிட்ட உங்களுக்கு இன்றைய உங்கள் பதிவு திருப்தியளிக்கிறதா?

6) உங்களது இன்றையப் பதிவுக்கும் பின்னூட்டமளிக்காதவர்களை, ஓட்டளிக்காதவர்களை திட்டிப் பதிவிடுவீர்களா?

7) உங்கள் சினிமாத் துறை குறித்த பதிவுகள் மிக நல்லாருக்கு. அப்துல் கலாம் அவர்களுக்கு நேர்ந்த அவமானம் குறித்த உங்கள் பதிவின் கருத்துக்கள் மிக நன்றாக இருந்தாலும் அந்தப் பல்சர்ல பிரதமரும் , காங்கிரஸ் தலைவரும் இருக்க படம் தேவையா?

8) கருத்துக்களை படிக்கும் முன்னர் படத்தை பார்த்துவிட்டு உங்கள் மேல் கோபப்பட்டு படிக்காமல் பலர் சென்றிருப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

9) பின்னூட்ட அணாணிகள தண்டிக்க பல வழி சொன்னீங்க, அதே மாதிரி எழுத வந்ததே திரட்டிகளுக்காவும், ஓட்டுக்கும், பின்னூட்டத்துக்கும் தான் அப்டின்னு கூவுற உங்களுக்கு என்னா தண்டணை குடுக்கலாம்?

10) யாரோ திட்றாங்கன்னு போறேன்னு சொல்றவங்க, அப்றம் அமெரிக்காலருந்து ஹிலாரி கூப்புட்டாங்க, ஆப்கானிஸ்தான்ல இருந்து முல்லா ஒமர் கூப்புட்டாரு, இலங்கையிலருந்து கோத்தபயா கூப்புட்டாருன்னு சொல்லிட்டு திரும்ப வர்றவங்கள என்ன செய்யலாம்?

17 comments:

Anonymous said...

சக்திவேலுக்கு ஆப்பு செருகியுள்ளீர் பிரபல பதிவர் நாமக்கல் சிபி அவர்களே

Anonymous said...

நன்றாக உறைக்கும் படி கேட்டுள்ளீர்கள்

பிரபல பதிவர் குழலி said...

மொக்கை மேனை சூப்பர் மேன் ஆக்காம விடமாட்டிங்க போல

ஜோசப் பால்ராஜ் said...

ஒன்னியும் புரியல. போறவர புடிச்சு கூட்டியாரீங்க. அப்பால கேள்வி கேட்குறீங்க. என்ன தான் நடக்குது?

ஜோசப் பால்ராஜ் said...

But உங்க கேள்வில இருக்க நியாயம் எனக்கு புடிச்சுருக்கு.

குழலி / Kuzhali said...

எவன் என் பெயரை பயண்படுத்தி கமெண்ட் போட்டது?

Radhakrishnan said...

பதில் சொல்ல வேண்டி அன்னாருக்குத் தகவல் அனுப்பிவிட்டீர்களா?!

இக்கேள்விகளை அவர் பிரச்சினையாகக் கருதாமல் இருந்தால் சரி!

VSK said...

நட்புக்கு எல்லை கிடையாதுன்ற கட்சிக்காரரா இருப்பாரோ நம்ம பிரபல பதிவர்? நாம கேக்கலைன்னா வேற யாராவது கேட்டுருவாங்களே!! அவர் இதைச் சரியா எடுத்துக்குவாருன்னு நம்பறேன்!

सुREஷ் कुMAர் said...

இங்கையும் பத்தா..

போனவர கூப்டுவந்து தாளிக்குரிங்கலே..

குழலி / Kuzhali said...

தமிழ் மணம் வாசகர் பரிந்துரையில முதல்ல நிக்குது
சக்திவேலுங்கிற பேரு வந்தாலே முதலில் பரிந்துரையில் வருமாரு தமிழ்மணத்தில் செய்து விட்டார்கள் போல... சக்திவேலை கண்டா சும்மா அதிருதில்லை

பிரபல பதிவர் குழலி said...

//குழலி / Kuzhali said...
எவன் என் பெயரை பயண்படுத்தி கமெண்ட் போட்டது?//

நான் தாண்டா

காப்பு said...

ஆப்பு வேறு யாருமில்லை. நம்ம நாமக்கல் சிபி. ஆப்பும் தலைக்கணம் என்று எழுதுவான். நாமக்கல் சிபியும் தலைக்கணம் என்று எழுதுவார். சந்தேகம் இருந்தால் கூகிளில் அடித்து தேடி பாருங்கள்.

வால்பையன் said...

நல்லாயில்ல!
எங்க தானை தலைவர் சக்திவேலை சீண்டுறது நல்லாயில்ல!

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

சக்திவேலுக்கு ஆப்பு செருகியுள்ளீர் பிரபல பதிவர் நாமக்கல் சிபி அவர்களே
//

//காப்பு said...

ஆப்பு வேறு யாருமில்லை. நம்ம நாமக்கல் சிபி. ஆப்பும் தலைக்கணம் என்று எழுதுவான். நாமக்கல் சிபியும் தலைக்கணம் என்று எழுதுவார். சந்தேகம் இருந்தால் கூகிளில் அடித்து தேடி பாருங்கள்.
//

நண்பர் சக்திவேல் அவர்களுக்கும் எனக்கும் முடிந்துவிடும் விஷமத்தனத்தைச் செய்யும் அனானி அன்பர்களை அன்புடன் கண்டிக்கிறேன்!

சக்திவேல் அவர்களுக்கும், எனக்குமான புரிதலில் உங்கள் விஷம பப்புகள் வேகாது! வேண்டுமானால் நிஜப்பெயரில் பின்னூட்டமிட்டு ஒரு முறை முயன்று பாருங்கள்!

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

Anonymous said...

தயவு செய்து யாராவது சக்திவேல் blogயை hack/block பன்னுங்களென்

நன்றி
blog வாசிப்போர் சங்கம்.

Anonymous said...

இது என்ன கருமாந்திரமடா?

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment