Saturday, July 18, 2009

அன்புள்ள ஆப்பு & ஆப்பரசன்...

அன்புள்ள ஆப்பு & ஆப்பரசன்,

உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா? பதிவு எழுதுனா கட்டாயம் பின்னூட்டம் போட்டே ஆகனுமா? பின்னூட்டத்துக்காக தான் பதிவு எழுதவே வர்றீங்களா? நீங்க எல்லாப் பதிவருக்கும் போயி பின்னூட்டம் போடுறியளோ? எத்தனப் பதிவுகளுக்கு நீங்க பின்னூட்டம் போட்டுருக்கியள்னு ஆதாரத்தோட சொல்லுங்க, அப்பறம் அடுத்தவனப் பத்தி பேசுங்க.

இதுல மிஸ்டர்.ஆப்பு,ஆப்பரசன் ஆபசமா எழுதுரார்னு வேற குறைப்பட்டுக்கிறாரு. இவரு ரொம்ப நல்லா எழுதிட்டமாதிரி. அசிங்கமான வார்த்தைகள உபயோகிக்கிறது மட்டும் ஆபாசமில்லை மிஸ்டர்.ஆப்பு. அடுத்தவங்களப் பத்தி தேவையேயில்லாத விசயங்கள நீங்க எழுதுறது ஆபாசம் தான். இதுவும் அசிங்கம் தான்.

நீங்க எழுத வந்தா எழுதிட்டுப் போங்க. பதிவு என்பது நீ உன் விருப்பத்துக்கு எழுதுவது. உன் விருப்பத்துக்கு எழுதலாம்னா அதுக்காக அடுத்தவங்களப்பத்தி என்னவேணும்னாலும் எழுதலாம்னு அர்தமில்ல. காதல் கோட்டையில புகழ் பெற்ற வசனம் ஒன்ன அகத்தியன் எழுதியிருப்பாரு. ”உரிமை அப்டிங்கிறது அடுத்தவன் மூக்கு வரைக்கும் தான். மூக்க தொடக்கூடாது”. நீங்க எழுத வந்தத எழுதிட்டுப் போங்க. அதப் படிக்கிறவங்க புடிச்சுருந்தா கட்டாயம் கருத்து சொல்லுவாங்க. அதே மாதிரி உங்களுக்குப் புடிச்ச பதிவ போயி படிங்க. புடிச்சுருந்தா ஓட்டுப் போடுங்க. பின்னூட்டம் போடுங்க. இல்லன்னா போயிக்கிட்டே இருங்க.

ஓட்டுப் போடனும், பின்னூட்டம் போடனும்னு கட்டாயப் படுத்த நீங்க யாருப்பா? நீங்க ஆப்பு அடிக்கிறேன், முதுகு சொறியிறவன காலி பண்ணப் போறேன்னு சொல்லிக்கிட்டு கிளம்புறது எந்த விதத்துல நியாயம் சாமீ? யாரு உங்களுக்கு அந்த அதிகாரம் குடுத்தது? உன் வேலைய சிறப்பா நீ பாரு. அடுத்தவனுக்கு புத்தி சொல்லவோ, ஆப்படிக்கவோ நீ யாரு ராசா? உனக்கு ஆப்பு எவனுமே அடிக்க மாட்டான்னு தைரியமா?

வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு. இப்டி கேவலமா அடுத்தவங்களப் பத்தி எழுதுறத விட்டுட்டு உங்களுக்கு தெரிஞ்ச நல்ல விடயங்கள நல்ல முறையில எழுதுங்க. எழுதுறப்ப பின்னூட்டங்கள் வரணும், ஓட்டு விழணும்னு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எழுதுங்க. Expectations Reduces the Joy - இது ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஜி சொல்லிக்கொடுக்கும் வாழும் கலையின் முதல் கான்செப்ட். இத கடைபிடிங்கப்பா. இன்னும் நல்ல விவரம் தெரியணும்ணா நீங்க எந்த ஊர்ல இருக்கியளோ அங்கன ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஜி யோட வாழும் கலை தரும் பயிற்சியில சேர்ந்து எல்லாத்தையும் கத்துக்கங்க. நீ யார் அப்டின்னு ஒரு கேள்வி வரும் இந்தப் பயிற்சியில. அப்ப தெரியும் சாமி நீ என்ற நீ ஒன்னுமே இல்லாத ஒன்னுன்னு. அதுக்கப்புறம் சுதர்சன கிரியான்னு ஒரு பயிற்சி இருக்கு. இதெல்லாம் கத்துக்கிட்டு வாழ்க்கையில முன்னேறப் பாருங்க ராசா.

வலையுலகம், இணையம் எல்லாம் ஒரு அற்புதமான விடயங்கள். நீ நல்லதை கொடுத்தால் நல்லதைப் பெறுவாய், நீ அவலத்தை தெளித்தால் அவலத்தை தான் அடைவாய்.

ஓம் சாந்தி சாந்தி .

11 comments:

கவி அழகன் said...

வலையுலகம், இணையம் எல்லாம் ஒரு அற்புதமான விடயங்கள். நீ நல்லதை கொடுத்தால் நல்லதைப் பெறுவாய், நீ அவலத்தை தெளித்தால் அவலத்தை தான் அடைவாய்.supper

ஜோசப் பால்ராஜ் said...

பொறுப்பான பதிவுங்க. நல்லா சொல்லியிருக்கிங்க.

நாமக்கல் சிபி said...

//வலையுலகம், இணையம் எல்லாம் ஒரு அற்புதமான விடயங்கள். நீ நல்லதை கொடுத்தால் நல்லதைப் பெறுவாய், நீ அவலத்தை தெளித்தால் அவலத்தை தான் அடைவாய்.supper//

சூப்பர்! உண்மையை இடிச்சி சொல்லி இருக்கீங்க!
நல்ல நண்பர்கள் இப்படித்தான் இடித்துரைப்பார்கள்!
கெட்ட நண்பர்கள் செய்யும் எல்லா செயல்களையும் வெறுமனே ஒத்து ஊதிவிட்டு, பிரச்சினையில் அகப்படும்போது விட்டு விட்டு ஓடி விடுவார்கள்! அதையும் நினைவில் கொள்வது ந்ல்லது!

வாழ்த்துக்கள்!

Anonymous said...

you r the advertiser for sri sri ravishankar jee ya.... the same u conveyed for apperasan and appu is for you too. don't enforce others to follow on yours way... except that you post is a explanatory.

சென்ஷி said...

சூப்பர் கருத்துக்கள்!

Sanjai Gandhi said...

அருமை.. விடுங்க தலைவா.. அவர்களுக்கு பழைய வரலாறுகள் தெரியாது போல. தெரிந்தால், தெறித்து ஓடிவிடுவார்கள்..

ஊர்சுற்றி said...

வேற ஒண்ணுமில்லீங்க - ஒருவித மன வியாதிதான். இதத்தான் 'சிக்மண்ட் பிராய்ட்' என்ன சொல்றார்னா....
(கொஞ்சநாளா இப்படித்தாங்க வாய்ல வருது...)

அத நான் ஒரு இடுகையாப் போடுறேன். மத்தபடி எல்லோரும் சிரிச்சி சந்தோசமா இருந்தா நமக்கும் மகிழ்ச்சிதான்.

ரவி said...

அருமை.. விடுங்க தலைவா.. அவர்களுக்கு பழைய வரலாறுகள் தெரியாது போல. தெரிந்தால், தெறித்து ஓடிவிடுவார்கள்.................

/////

ஹி ஹி வழிமொழிகிறேன்...

ஆ.ஞானசேகரன் said...

//அடுத்தவனுக்கு புத்தி சொல்லவோ, ஆப்படிக்கவோ நீ யாரு ராசா? உனக்கு ஆப்பு எவனுமே அடிக்க மாட்டான்னு தைரியமா?//

அதானே....

Anonymous said...

//ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஜி //

முன்னாடி ரெண்டு ஸ்ரீ இருக்கே!
அப்படி சொறியலைனா அவருக்கு புடிக்காதா!
நீங்க முதல்ல சொறியறத நிப்பாட்டிட்டு அடுத்தவனுக்கு அட்வைஸ் கொடுங்க!

Radhakrishnan said...

உங்களுக்கும் நீங்களே ஒருதரம் எச்சரிக்கை விட்டமாதிரியில்ல இருக்கு இந்த பதிவு.

//வலையுலகம், இணையம் எல்லாம் ஒரு அற்புதமான விடயங்கள். நீ நல்லதை கொடுத்தால் நல்லதைப் பெறுவாய், நீ அவலத்தை தெளித்தால் அவலத்தை தான் அடைவாய்.//

உண்மையாகவே நன்றாக இருக்கிறது.

Post a Comment