Friday, July 10, 2009

டப்பாசு...

ரெண்டு நாளைக்கு முன்னாடி மதுரை மாவட்டத்துல ஒரு ஊர்ல ஒரு பட்டாசு தொழிற்சாலை(??)யில வெடி விபத்து ஏற்பட்டு அந்த ஊர்ல வூட்டுக்கு ஒரு ஆளு இறந்துருக்காங்க.

முதல்வர் அய்யா சட்டசபையில காங்கிரஸ் எம் எல் ஏ ஞானசேகரன் கேட்ட கேள்விக்கு ஒரு பதில் சொல்லியிருக்காருங்க. 1963ல உரிமம் வாங்கி தொடங்குனதாம் அந்த தொழிற்சாலை. அந்த உரிமம் 2011 வரைக்கும் செல்லுமாம். அப்ப 1963ல உரிமம் வாங்கிட்டு அதுக்கப்பால ஒரு பாதுகாப்பு விதிகளையும் கண்டுக்காம அவன் தொழில் நடத்திக்கிட்டு இருந்தா நம்ம அரசாங்கத்தால ஒன்னுமே செய்ய முடியாதா? அந்த தொழிற்சாலைய பாதுகாப்பு விதிகள் ஒழுங்கா கடைபிடிக்கப்பட்டிருக்கான்னு எல்லாம் யாரும் சோதனை செய்ய மாட்டாங்களா? டப்பாசு தொழிற்சாலைக்கு கரண்டு கனெக்சன் குடுக்க கூடாதாம்ல? அப்ப எப்டி இந்த கெம்பனிக்கு மட்டும் குடுத்தாய்ங்க?

இப்ப செத்தவங்களுக்கு 1 லட்சம்னு நம்ம காச குடுக்குறாங்களே, இந்த விதி மீறல்களையெல்லாம் கண்டுக்காம விட்ட எல்லா அதிகாரிங்களையும் புடிச்சு விசாரிச்சு அவங்ககிட்ட இந்த காசையெல்லாம் வசூலிக்கலாம்ல?

1 comment:

Radhakrishnan said...

வருடா வருடமோ, சில வருடங்கள் என உரிமம் படி தொழிற்சாலை நடக்கிறதா என ஆய்வுக்கு உட்படுத்துவது என்பது நடக்க வேண்டும். பணம் கட்டிவிட்டால் அதையெல்லாம் யார் கவனிப்பது!

இதையெல்லாம் யார் கேட்பது, வலைப்பூ படித்து சட்டத்தை ஒழுங்காக நிறைவேற்றத் துணிவார்களா என்ன!

Post a Comment